How To Rectify Skin Dryness During Winter Season In Tamil

0

 

தக்காளி மற்றும் தயிரை கொண்டு குளிர்காலத்தில் ஏற்படும் தோல் வறட்சியை சரி செய்யலாம்

 

பொதுவாகவே குளிர் காலத்தில் நமது சருமம் மிகவும் வறட்சியாக காணப்படும். அதனை சரி செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால் போதும்.பொதுவாகவே தக்காளி மற்றும் தயிர் தோலினை பரபரப்பாகவே வைக்க உதவுகிறது. இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு குளிர்காலம் வந்தவுடன் முகம் அதிக அளவில் வறண்டு காணப்படும்.இதற்காக சருமம் பராமரிக்க வேண்டும் என்பதற்காக நாம் நிறைய கிரீம் உபயோகிப்போம்.அதிகமாக கிரீம் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நாம் இதை சரி செய்து விடலாம்.

 

பொதுவாக தண்ணீர் மகத்துவம்

வறண்ட சருமத்தை உடையவர்கள் பொதுவாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.நாம் எந்த அளவிற்கு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது சருமம் வறட்சி ஏற்படுவதை தடுக்கிறது மற்றும் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் சாப்பிடுவதன் மூலமாக சரும வறட்சியை குறைத்துக் கொள்ளலாம்.

 

தக்காளி மற்றும் தயிர்

 

பொதுவாகவே குளிர்காலத்தில் நமது தோலில் தழும்புகள், கீறல், வடுக்கள் என ஏற்படுவது சகஜமான ஒன்றுதான்.இதனை தக்காளி மற்றும் தயிர் பயன்படுத்தி சரி செய்து விடலாம்.இப்பொழுது தக்காளி பழச்சாறு மற்றும் தயிரை நன்றாக கலந்து கொள்ளவும்.இப்பொழுது இதை உங்கள் சருமத்தில் தடவவும்.சிறிது நேரம் கழித்து நீரில் கழுவிவிட வேண்டும் .இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள வறட்சி மற்றும் கீறல் போன்றவை நீங்கிவிடும்..

See More App:  How To Avoid Hair Loss In Tamil

 

ஆரஞ்சு மற்றும் தேன்

 

பொதுவாக பனிக்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைக்கு ஆரஞ்சு மற்றும் தேனை பயன்படுத்தலாம்.இப்பொழுது ஆரஞ்சு பழச்சாறு நன்றாக கலந்து சருமத்தில் தடவி பின்னர் அதை நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் சருமம் வறட்சி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

 

கான்பிளவர் மற்றும் தயிர்

 

வீட்டிலுள்ள கான்ப்ளவர் மற்றும் தயிர் இரண்டையும் ஒன்றாக கலந்து தினமும் உங்கள் உடம்பில் தடவி காயவிட்டு பின்னர் கழுவி வர உங்கள் சருமம்வறட்சி நீங்கி பளபளப்பாக மாறும்.

 

வைட்டமின் சத்துக்கள்உள்ள உணவு

See More App:  How To Increase Your Health In Tamil

 

வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ உள்ள உணவுகள் மற்றும் பழங்கள் அதிகம் சாப்பிட்டால் பனிக்காலத்தில்உங்கள் சரும வறட்சியை தடுக்கலாம்.

 

பன்னீர் மற்றும் தேன்

 

தேன் மற்றும் ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னி இரண்டையும் ஒன்றாக கலந்து உங்கள் முகத்திற்கும் சருமத்திற்கும் அப்ளை செய்து பிறகு நன்றாக நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்து வந்தால் வறட்சி நீங்கும் உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்.

 

வெண்ணை கொண்டு சரும வறட்சியை போக்கலாம்

 

பொதுவாகவே அதிக மேக்கப் போட வேண்டாம். எப்பொழுதும் வெண்ணெய் வீட்டில் வைத்துக் கொள்வது நல்லது.வெடிப்பு சரும வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால் போதும் உங்கள் சரும வறட்சி நீங்கி விடும்.

 

காற்றாலை மற்றும் பப்பாளி

 

பொதுவாக இவை இரண்டுமே சரும வறட்சியை போக்கும் பண்பு கொண்டவை.இவை இரண்டையும் தனித்தனியாக உபயோகிக்கலாம் .நன்கு தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வறட்சி நீங்கும். அது போலவே பப்பாளியில் அதிக அளவு வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.இந்த பப்பாளி பழத்தை கூழ்போல் அரைத்து உங்கள் முகத்திலும் உடம்பிலும் தேய்த்து ஊற வைத்த பின்னர் குளித்து வந்தால் உங்கள் சருமம் பொலிவடையும்.

See More App:  How To Cure All disease in Simple Home Remedies In Tamil

 

பாதாம் பால் மற்றும் எலுமிச்சை

பாதாம் ஒரு டீஸ்பூன் ,எலுமிச்சை ஜூஸ் ஒரு டீஸ்பூன் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் வைத்துக் கொள்ளவும்.இப்போது உங்கள் முகத்தில் வறட்சியான பகுதியில் இதை தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவிடவும் .இப்பொழுது உங்கள் சருமம் மென்மையாக காணப்படும்.

 

கேரட் மற்றும் பால்

பொதுவாக தண்ணீர் அதிகமாக குடித்தாலே போதும்சரும வறட்சி நீங்கிவிடும் கேரட் மற்றும் பால் இரண்டையும் நன்றாக அரைத்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உங்கள் முகம் பளபளப்பாகும்.இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உங்கள் சருமத்தின் செல்களை பாதுகாக்கும்.உங்கள் சருமத்தின் மென்மை தன்மையும் அதிகரிக்கும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here