How To Increase Your Skin brightness By Simple Home Remedies In Tamil

0

How To Increase Your Face Brightness In Tamil:

சப்போட்டா பழம் நம் முகத்தை பளபளப்பாக மாற்றும் அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா

நம் முகத்தை அழகாக மாற்றுவது ஒரு கடினமான செயல் இல்லை. நம் வீட்டில் இருக்கும் காய்கறிகள் பழங்கள் இவற்றை வைத்தே நம் முக அழகை பெற்றுவிடலாம்.அத்துடன் நமது முடியின் பிரச்சனைகளையும் நாம் எளிதில் தீர்த்து விடலாம்.இப்பொழுது நாம் சப்போட்டா பழத்தைக் கொண்டு எப்படி நம் இயற்கை அழகை எப்படி அதிகரிக்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.பொதுவாக சப்போட்டா பழம் உண்பதால் நமக்கு என்னவென்று பயன் என்று பார்த்தால் நமது முகம் மிகவும் பளபளப்பாகவும் மாறும். அதேபோல நமது தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

 

இந்த சப்போட்டா பழம் அழகு ரகசியம் நிறைந்தது

பொதுவாக அதிக ஊட்டச்சத்துகளை நிறைந்துள்ள பழங்களில் இந்த சப்போட்டாவும் ஒன்று. இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ,கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இவைகள் தான் இதன் மகிமை காரணமா இந்த பழம் எப்படி நம் முகத்திற்கு பொழிவை தருகிறது என்று பார்ப்போம்.

See More App:  How To Rectify Skin Dryness During Winter Season In Tamil

 

உங்கள் முகம் இளமையாக இருக்க வேண்டுமா

 

பொதுவாக அனைவரும் விரும்புவது நமது முகம் பொலிவாகவும் இளமையாகவும் இருக்க வேண்டும். தேவையான பொருட்கள் 2 டீஸ்பூன், பால் ஒரு டீஸ்பூன் ,தேன் மற்றும் ஒரு சப்போட்டா பழம் முதலில் எடுத்துக் கொள்ளவும்.முதலில் சப்போட்டா பழத்தை நன்றாக அரைத்துக் கொண்டு அதனுடன் தேன் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பிறகு இந்த கலவையை முகத்தில் தேய்த்து நல்ல மசாஜ் செய்யவும்.அதன் பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும்.இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

See More App:  How To Increase Your Health In Tamil

 

உங்கள் தலையில் பொடுகு தொல்லை அதிகமாக உள்ளதா

 

பொதுவாக பலருக்கும் பொடுகு தொல்லை என்பது ஒரு பொதுவான பிரச்சினைதான் நமது முடியின் வறட்சியின் காரணமாக அதிகமாக பொடுகுத் தொல்லை இருக்கும்.,இதன் விளைவாக நமக்கு முடி கொட்டுதல் வழுக்கை என படிப்படியாக பல விளைவுகள் நமக்கு உண்டாகும்.இதனை நாம் சப்போட்டாவை கொண்டு சரி செய்து விடலாம்.தேவையான பொருட்கள் விதைகள் 8 ஆமணக்கு ஆயில் 2 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.இப்போது சப்போட்டா விதையை நன்கு அரைத்து கொண்டு அதனுடன் ஆமணக்கு ஆயில் சேர்த்து தலையில் பேஸ்ட் மாதிரி அப்ளை செய்யவும்.அதன் பிறகு 20 நிமிடம் கழித்து தலையை நன்றாக அலசிவிடவும்.இவ்வாறு செய்து வந்தால் நமக்கு பொடுகு தொல்லை இருக்காது.

 

உங்களின் முகம் தங்கம் போல மின்ன வேண்டுமா

See More App:  How To Avoid Hair Loss In Tamil

 

உங்கள் முகத்தில் உள்ள கருமை நீங்கி தங்கம் போல ஜொலிக்க வேண்டுமென்றால் சப்போட்டா பழத்தை பயன்படுத்தினால் போதுமானது.தேவையான பொருட்கள் ஒரு சப்போட்டா பழம் ஒரு டீஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.செய்முறை சப்போட்டா பழத்தை தோல் மற்றும் விதையை நீக்கி நன்கு அரைத்துக் கொள்ளவும்.இந்த கலவையை உங்கள் முகத்தில் நன்கு தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி உங்கள் முகம்க தங்கம் போல ஜொலி ஜொலிப்பாக மாறிவிடும்.

 

சப்போட்டா பழத்தை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்

இந்த குறிப்புகளை பயன்படுத்தினால் முடி மற்றும் முகத்தில் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதே போன்று நாம் சப்போட்டாவை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல்ஆரோக்கியம் வலுப்பெறும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here