How To Increase Your Health In Tamil

0

பேரிக்காயை கொண்டு உங்களின் அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்தின்பலவகை பிரச்சனைகளை சரிசெய்யலாம்

 

பொதுவாக அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனையில் அழகு மற்றும் பருக்கள் முடி பிரச்சனைகள் தான் இதனை சரிசெய்ய வழி இல்லையா என்று நினைக்காதீர்கள். அதற்கு வழி இருக்கிறது.அதுவும் நம் வீட்டில் இருக்கும் பொருட்கள் மற்றும் பேரிக்காயை கொண்டு நாம் எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

 

பேரிக்காய்

 

பொதுவாகவே பேரிக்கா என்றால் நாம் விழாக்காலத்தில் மட்டும் தான் அதை வாங்குவோம்.உண்மையிலேயே இந்த பழத்தின் மகிமை யாருக்கும் தெரியவில்லை என்று தான் சொல்ல முடியும்.அவ்வளவு அதிகமாக ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.இந்த பேரிக்காய் பழத்தில் இந்தப் பழம் உங்கள் முடி மற்றும் பருக்கள் மற்றும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வல்லது.

See More App:  How To Cure Head Itching Problem For Men In Tamil

உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகளை போக்க

 

உங்கள் முகத்தின் அழகை கெடுப்பது முக்கியமாக  இருப்பது அழுக்குகள் தான். இதனை சரி செய்ய ஒரு பேரிக்காய், 2 டீஸ்பூன் ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.இப்பொழுது ஓட்ஸை சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அதன் பிறகு தேனையும் கலந்து கொள்ளவும்.இப்போது இந்த உங்கள் முகத்தில் பூசிக் கொள்ளவும்.சுமார் 20 நிமிடம் கழித்து நீரில் கழுவி விட வேண்டும்.இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் போதும் உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி உங்கள் முகம் பொலிவு பெறும்.

 

உங்கள் முடி பொலிவு பெற வேண்டுமா

 

பொதுவாகவே பேரிக்காய் உங்கள் முடியின் ஊட்டச்சத்து அதிகரிக்கும். தேவையான பொருட்கள் ஒரு பேரிக்காய், ஆப்பிள் சீடர் வினிகர் இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.தோல் நீக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் .இந்த கலவையை உங்கள் முடியில் தடவி விட வேண்டும்.சுமார் 20 நிமிடம் கழித்து உங்கள் முடியை நீரில் அலசி விட வேண்டும். இது போன்று தொடர்ந்து நீங்கள் செய்து கொண்டு வந்தால் உங்கள் முடி விரைவில் மின்ன தொடங்கும்.

See More App:  How To Rectify Skin Dryness During Winter Season In Tamil

 

முகத்தில் உள்ள பருக்களை போக்க

 

பொதுவாகவே முகத்தில் பருக்கள் வருவது சகஜமான ஒன்றுதான்.முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கவும் முகத்தில் உள்ள பருக்களை அழிக்கவும் இந்த பேரிக்காய் நன்கு உதவும்.

இவற்றிற்கு காரணம் இதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் .இவை நமது முகத்திற்கு எந்தவித கிருமிகளும் அண்டாமல் பாதுகாத்துக் கொள்கிறது.

 

இளமையான முகத்திற்கு பேரிக்காய் உதவுகிறது

 

உங்கள் முகம் அதிக காலம் இளமையாக இருக்க வேண்டுமா .அப்பொழுது பேரிக்காய் ஒரு நல்ல தீர்வாக உள்ளது.இதில் உள்ள வைட்டமின் சி. நமது வயதை தள்ளி போடும் ஆற்றல் கொண்டது.மேலும் இதில் உள்ள வைட்டமின் கே முகம் சுருக்கம் அடையாமல் பாதுகாத்துக் கொள்கிறது.

See More App:  முகத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா

 

முடி உதிர்வை தடுக்க பேரிக்காய் உதவுகிறது

 

பொதுவாக பேரிக்காய் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் முடி உதிர்வை தடுக்கவும் மண்டையில் ஏற்படும் வறட்சியை முழுவதுமாக போக்கவும் உதவுகிறது.பொதுவாகவே கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது .எனவே முடியின் முழு போஷாக்கிற்கும்மிகவும் உதவுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here