How To increase Your Face Brightness In Tamil

0

திராட்சை பழம் உங்கள் முகத்தை பளபளவென மாற்றும் அது எப்படி என்று பார்க்கலாம்.

 

இது வரைக்கும் திராட்சைப்பழம் என்றால் நாம் சாப்பிடுவதற்கு மட்டும் தான் உபயோகித்து இருப்போம்.ஆனால் இந்த திராட்சைப்பழம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படுகிறது. அதுவும் நம் முக அழகை இரட்டிப்பாக மாற்றுகிறது.பொதுவாகவே நம் முகத்தில் முகப்பருக்கள் கருமை மற்றும் வறட்சி போன்ற பல பிரச்சனைகள் வரும்.அதை எல்லாம் இந்த திராட்சைப் பழத்தை கொண்டே நாம் சரி செய்து கொள்ளலாம்.

 

முகத்தில் உள்ள பருக்கள் மறைய

 

கவலைப்படாதீர்கள் திராட்சைப் பழத்தை கொண்டு அதை நாம் சரி செய்துவிடலாம்.ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் 4திராட்சைப்பழம் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும்.முதலில் திராட்சைப் பழம் மற்றும் தயிர் இரண்டையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.அத்துடன் எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ளவும்.இப்போது இந்த கலவையை உங்கள் முகத்தில் நன்றாக தடவி சுமார் 20 நிமிடம் கழித்து நீரில் உங்கள் முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும். இந்த குறிப்பை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி உங்கள் முகம் பொலிவாக மாறிவிடும்.

See More App:  How To Cure Head Itching Problem For Men In Tamil

 

உங்கள் முகம் பளபளப்பாக வேண்டுமாஇந்த திராட்சை பழத்தை எப்படிப் பயன்படுத்தலாம்

 

எப்போதுமே உங்கள் முகம் தகதகவென தங்கம் போல மின்ன வேண்டுமா திராட்சைப் பழத்தைகொண்டு நாம் அதை சரி செய்யலாம்.அதற்குத் தேவையான பொருள்கள் முல்தானி மட்டி ஒரு டீஸ்பூன்,ஒரு டீஸ்பூன் தண்ணீர் ,ஒரு டீஸ்பூன் லெமன் ஜூஸ்,நான்கு திராட்சை பழத்தை எடுத்துக் கொள்ளவும். அரைத்து கொண்டு அத்துடன் லெமன் ஜூஸை சேர்த்துக் கொள்ளவும்.பன்னீர் மற்றும் முல்தானி மட்டியை சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் ஊற வைத்த பிறகு உங்கள் முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும்.இப்போது உங்கள் முகம் தங்கம் போல ஜொலிக்க மாறிவிடும். இதனை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டு வந்தால் உங்களுக்கு நல்ல மாற்றம்.தெரியும்.

See More App:  How To Increase Your Skin brightness By Simple Home Remedies In Tamil

 

உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குவதற்கு இந்த திராட்சை பழம் உதவுகிறது

 

பொதுவாகவே முக சுருக்கம் என்பது நமது வயதானவர்கள் போல மாற்றிவிடும்.அதனை திராட்சைப்பழத்தை கொண்டு எவ்வாறு சரி செய்யலாம்.அதற்கு தேவையான பொருட்கள் 8திராட்சை பழம் மற்றும் ஒரு தக்காளியை எடுத்துக் கொள்ளவும்.பொழுது தக்காளியை முதலில் நன்கு அரைத்துக் கொள்ளவும் அதன் பிறகுஅதை நன்றாக அரைத்து இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து உங்கள் முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும் அதன்பிறகு 15 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை கழுவிவிட வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 1 முதல் 2முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

See More App:  How To Rectify Skin Dryness During Winter Season In Tamil

 

உங்கள் முகத்தில் உள்ள வறட்சியைப் போக்க இந்த திராட்சை பழம் உதவுகிறது

 

உங்கள் முகம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக காணப்படுகிறதா?உங்கள் சருமம் சொரசொரப்பாக உள்ளதா இதனை திராட்சை பழத்தைக் கொண்டு சரி செய்துவிடலாம்.தேவையான பொருட்கள் ஒரு டீஸ்பூன் தேன் ,ஒரு டீஸ்பூன் பப்பாளி ஜூஸ் மற்றும்  நான்கு திராட்சைப் பழத்தை எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த கலவையை முகத்தில் நன்கு பூசி விடவும் சுமார் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும்.இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி என்றும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here