How To Cure Head Itching Problem For Men In Tamil

0

பொதுவாக ஆண்களுக்கு ஏன் தலை அதிகமாக அரிக்கிறது?அதனை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம்

 

பொதுவாக வெயில் காலமோ, மழைக்காலமோ, குளிர் காலமோ எந்தக் காலமாக இருந்தாலும் ,தலை முடி பிரச்சினை என்றாலே அதற்கு தலை முடியின் வேர் கால்களில் ஏற்படும் அரிப்பு தான். பொதுவாக இந்த பிரச்சனை எல்லா பருவ காலத்திலும் ஏற்படக்கூடியது.

 

எப்பொழுதும் நமக்கு தலை அரிப்பு இருந்து கொண்டு இருந்தால் நமக்கு எரிச்சலாகவே இருக்கும்.பொது இடங்களில் நம் தலையை அரித்து கொண்டே இருந்தால் அது மற்றவர் பார்வைக்கு அருவருப்பாக இருக்கும்.பொதுவாக இது பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை ஆகும்.

 

பொதுவாக தலைஅரிப்புக்கு காரணம்

 

பொதுவாக இதை நாம் சரியாக கணிக்க முடியாது .சிலருக்கு பொடுகு தொல்லையினால் மற்றும் தலையில் அழுக்கு நிறைவாக இருந்தாலும் தலை அரித்துக் கொண்டே இருக்கும். சிலருக்கு தலை முடியின் வேர்க்கால்களில் அதிகமாக எண்ணை சுரப்பதனால் கூட இந்த அரிப்பு அதிகமாக இருக்கும்.

See More App:  How To Increase Your Health In Tamil

 

 

வீட்டு சிகிச்சை மூலம் இதை எப்படி நாம் சரி செய்யலாம்

 

முதலில் அந்த அரிப்பை எதனால் ஏற்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்ட பிறகு அதற்கான தீர்வை தேடுங்கள்.அப்படி செய்தால் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே இதை நாம் ஈஸியாக சரிசெய்து விடலாம்.

 

எலுமிச்சைச்சாறு

 

பொதுவாகவே எலுமிச்சையில் இயற்கையாகவே ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி தன்மை அதிகமாகவே இருக்கிறது.இது நம் தலைமுடி அரிப்புக்கு மிகவும் சிறந்த தீர்வை கொடுக்கும்.இப்போது எலுமிச்சை சாறு ஒரு காட்டன் துணியில் எடுத்துக்கொண்டு அதை நமது தலைமுடி வேர்கால்களில் ஒத்தி எடுத்து விடுங்கள் .சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் இப்படியே செய்து கொண்டு விட்டு பிறகு குளிர்ந்த நீரில்உங்கள் முடியை அலசி விடுங்கள்.இப்படி நீங்கள் செய்து வந்தால் உங்களுக்கே மாற்றம் தெரியும். குறிப்பு உங்கள் தலையில் புண்கள் ஏதாவது இருந்தால் இந்த முறையை தயவு செய்து தவிர்த்து விடவும்.

 

See More App:  How To Increase Your Skin brightness By Simple Home Remedies In Tamil

தேங்காய் எண்ணெய் பயன்கள்

 

பொதுவாக தலை அரிப்பு என்பது ஏற்பட காரணம் தலைமுடியின் வறட்சியாக கூட இருக்கலாம்.  தலைக்கு தேவையான ஈரப்பதத்தையும் மாய்ச்சரைஸரையும் கொடுத்தாலே போதும்..பொதுவாக தேங்காய் எண்ணெயில் இந்த இரண்டும் உள்ளது.தேங்காய் எண்ணெய் லேசாகச் சூடு செய்து  உங்கள் தலை முடி வேர்க் கால்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள் .20 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு பின்னர் சில மணி நேரங்கள் உங்கள் தலையை ஊற வைத்து விடுங்கள்.பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு உங்கள் தலையை நன்றாக அலசிவிடவும்.இப்படி செய்தால் தலை ஏற்படும் அரிப்பை தடுக்கலாம்.

 

பேக்கிங் சோடா பயன்கள்

 

பொதுவாக பேக்கிங் சோடாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-பங்கல் நமது தலைமுடி மற்றும் வேர்க்கால்களின் பிஎச் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.அதனால் 2 அல்லது 3 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலகலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முடியின் வேர்க்கால்களில் தேய்த்து 10 முதல் 20 நிமிடங்கள் வரை காயவைத்து பின் உங்கள் முடியை நன்கு அலசிவிடுங்கள்.இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

See More App:  முகத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா

 

ஆனியன் ஜூஸ் பயன்கள்

 

இப்போது உங்களுக்கு தேவையான வெங்காயத்தை எடுத்து கொண்டு அதை நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.இப்பொழுது அந்த சாரை எடுத்துக் கொண்டு உங்கள் முடி வேர்க் கால்களில் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.பின்பு நன்றாக உலர்ந்த பின்பு உங்கள் முடியை அலசி விடவும்.பொதுவாக வெங்காயம் தலையில் எந்த ஒரு தொற்றும் உண்டாகாமல் தடுக்க கூடிய ஆற்றலை உடையது.

 

ஆப்பிள் சீடர் வினிகர் பயன்கள்

 

நான்கு பங்கு தண்ணீர் மற்றும் ஒரு கப் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து கொள்ளுங்கள்.உங்கள் தலையில் கொஞ்சம் கொஞ்சமாக வேர்கால்களில் ஊற்றி மசாஜ் செய்யுங்கள்.இதிலுள்ள மாலிக் அமிலம் மற்றும் வினிகரில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் உங்கள் வேர்கால்களில் ஏற்படும் அரிப்பை முழுவதுமாக தடுக்கின்றன.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here