முகத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா

0

 

முகத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றவும்…

கொலஸ்ட்ரால் என்றாலே எல்லோரும் பயப்பட தான் செய்வார்கள். இது கொஞ்சம் மோசமான ஒன்று தான்.ஆனால் இதை எளிதாக குறைத்துவிடலாம். பொதுவாக நமது வயிற்றுப் பகுதியில் வரும் கொலஸ்ட்ராலைக் கரைக்க தான் சிறிது நாட்கள் ஆகும்.தொடை,வயிறு,கை போன்ற பகுதியில் உள்ள கொலஸ்ட்ராலை நம்மால் இயற்கை முறையில் குறைக்க இயலும்.இப்பொழுது முகத்தில் கொலஸ்ட்ரால் இருந்தால் அதை எப்படி குறைக்க வேண்டும் என்பதை கீழே வரும் குறிப்புகள் மூலம் காணலாம்.

கொலஸ்ட்ரால்

பொதுவாக கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும் ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் இன்னொன்று கெட்ட கொலஸ்ட்ரால். இதில் இரண்டாவது வகை நமது உடலுக்கு ஆபத்தை தரக்கூடியது. அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் இவை முகத்தில் சேர்ந்தால் குறைப்பது கொஞ்சம் கடினம்தான். சரி இதை எப்படி நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

வாழைப்பழத் தோல்

வாழைப்பழ தோலில் அதிகமாக ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது.

ஆகையால் இதை முகத்தில் தேய்த்தால், முகத்தில் உள்ள கொலஸ்ட்ராலை விரைவில் குறைத்துவிடலாம் அல்லது ஆமணக்கு எண்ணெய் அதை நம் முகத்தில் தடவினான் கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியும்.

டீ பேக்

டீ பேக்கை ஒரு துணியில் எடுத்துக் கொண்டு, அதை நம் கண் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கொலஸ்ட்ரால் குறைந்துவிடும். மேலும் முகத்தில் உள்ள தூசி நீங்கிவிடும்.

வெந்தயம்

வெந்தயத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டு முதல் நாள் நைட்டு அதை ஊற வைத்துக் கொள்ளவும்.காலையில் அதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும் அல்லது இதை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும்.இதுவும் முகத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க ஒரு நல்ல வழியாகும்.

வெங்காயம்

வெங்காயம் என்றாலே அதிக பயனுள்ள ஒன்றாகும். நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க, இந்த வெங்காயம் பெரிதும் உதவும். இதனை எப்படி பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து விட முடியும் என்பதை இங்கு பார்ப்போம்.உப்பு ஒரு டீஸ்பூன், வெங்காயச் சாறு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை நன்றாக அரைத்து வெங்காயச் சாறு கிடைக்கும், அந்த சாறுடன் உப்பு கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முதல் நாள் நைட்டு உங்கள் முகத்தில் அப்ளை செய்து கொண்டு தூங்கி விடவும். மறுநாள் காலையில் முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து இந்த செயலை செய்து கொண்டு வந்தால் உங்கள் முகத்தில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்துவிடும்.

பூண்டு

பொதுவாக பூண்டு மூலிகை தன்மையுள்ள உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.பூண்டை நன்றாக அரைத்து அதை உங்கள் முகத்தில் உள்ள கொலஸ்ட்ரால் உள்ள பகுதியில்.தடவி.வந்தால்.கொலஸ்ட்ரால் நாளடைவில் குறைந்து விடும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

இந்த ஆப்பிள் சீடர் வினிகர் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதை நீரில் சேர்த்து நீங்கள் தினமும் குடித்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும்.உங்கள் கண் பகுதியில் உள்ள கொலஸ்ட்ராலையும் இது முற்றிலும் வெளியேற்றிவிடும்.

See More App:  How To Rectify Skin Dryness During Winter Season In Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here